Events – Page 2 – Ezhuna | எழுநா

Latest Past Events

இருத்தலின் மீது கவியும் இன்மைகள் – நூல் வெளியீட்டு நிகழ்வு – திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம்

Thirumarai Kalamanram 238 Main Street, A9, Jaffna

எழுநாவின் வெளியீடாகிய, இளங்கோவின் 'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' நூல் வெளியீட்டு நிகழ்வு, 28.02.2026 (சனிக்கிழமை) அன்று, காலை 10.00 மணிக்கு - 238, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது மணி மண்டபம் - திருமறைக்கலாமன்றத்தில் இடம்பெற்றது. திரு. இ. கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு. கி. செல்மர் எமில் வரவேற்புரை வழங்க, திரு. டெ. க. அரவிந்தறாஜ் மற்றும் திரு. சி. ரமேஸ் ஆகியோர் மதிப்பீட்டுரைகளை […]

பசுமை எனும் பேரபாயம் – நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் – கொழும்புத் தமிழ்ச் சங்கம்.

Colombo tamil sangam 07 57th Ln Wellawatta, Colombo

எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் 'பசுமை எனும் பேரபாயம்' நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அறிவோர் ஒன்றுகூடலில் 25.02.2026 (புதன்கிழமை) அன்று மாலை 5.45 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றது. திரு. த. இராஜரட்னம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திரு. த. ரெஷாங்கன் அறிமுக உரையினை ஆற்றியிருந்தார். வாசகர்கள் , பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

பசுமை எனும் பேரபாயம் – நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் – தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி

Vallai-Tellippalai-Araly Rd, Tellippalai, Sri Lanka Vallai-Tellippalai-Araly Rd, Tellippalai

மக்கள் கலை இலக்கியப் பேரவையின் 'நூறு மலர்கள் மலரட்டும்' புத்தக அரங்க விழாவில் எழுநாவின் வெளியீடாகிய, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் பசுமை எனும் பேரபாயம் நூலின் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் ஜனவரி 31 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. கலை இலக்கியப் பேரவையின் தலைவர் த. ஸ்ரீபிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு ஆசிரியர் க. தவசீலன் அவர்கள் […]