யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம் | ஆவணப்பட வரிசை 1 - Ezhuna | எழுநா
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
40 நிமிட பார்வை

யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம் | ஆவணப்பட வரிசை 1

May 31, 2024 | Ezhuna

வடக்கு மாகாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தண்ணீர் (குடிநீர்) பேராபத்து பற்றிய எழுநாவின் விழிப்புணர்வு விவரணப்படம்! இது தண்ணீர் பற்றிய உலகளாவிய அரசியல் மற்றும் உலகமயமாதலின் விளைவுகள் பற்றிப்பேசும் அதேவேளை, வடக்கு மாகாணத்தின் நீர் மூலங்கள், நீர் ஆதாரங்கள் குறித்தும் கவனம் செலுத்துகின்றது. குறிப்பாக சுண்ணக்கற்கள் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீர்வளம் பற்றியே இந்த விவரணப்படம் அதிகம் கரிசனை கொள்கிறது.

அருகி வரும் நிலத்தடி நீர் வளம், நன்னீரின் அத்தியாவசியம், நிலத்தடி நீரைப் பெருக்க என்ன செய்ய வேண்டும், நீர் மூலங்கள் எப்படியான நடத்தைகள் மூலம் எவ்வாறெல்லாம் மாசடைகின்றன, தற்போதுவரை எத்தகைய பாதிப்புகள் மற்றும் மாசுகளை நீர் சந்தித்துள்ளது, இதை ஊதிப்பெருப்பிக்கும் பல்தேசிய கம்பனிகளின் வியாபார உத்திகள். சாமான்ய மக்களின் உளவியல் – பொதுப்புத்தி – தவறான புரிந்துமைகள், தண்ணீர் விற்பனைக்கு வருவதை ஊக்குவித்தால் ஓர் இனத்தின் பண்பாடு வாழ்வியல் தேசஇருப்பில் அது ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள், நீர் ஆதாரங்களை உருவாக்கவும் பராமரிக்கவும் பாதுகாக்கவும் வேண்டியதன் அவசியம், நீர் மேலாண்மை மற்றும் தீர்வுகள் என்பன பற்றியெல்லாம் இந்த விவரணப்படம் எடுத்தியம்புகின்றது.