மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு - மாதவணை மேய்ச்சல் தரை: நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவணை மேய்ச்சல் தரை: நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம்
வை. ஜெயமுருகன் வை. ஜெயமுருகன்
பிரசுரம் 03
வெளியீடு எழுநா

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டாலும், மயிலத்தமடு மற்றும் மாதவணைப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய மோதல்களின் மூல காரணியாக நிலப் பற்றாக்குறை காணப்படுகிறது. நிலத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கும் போது, கால்நடை விவசாயிகளுக்கும் பயிர்ச்செய்கையாளர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இன்மை காரணமாக, உள்ளூர் கால்நடைப் பண்ணையாளர்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்பகுதியின் சமூக-பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் உள்ளூர் சூழல், தற்போதுள்ள வரம்புகள் மற்றும் அரசியல் காரணிகள் போன்றவற்றுப் புரிந்துகொள்வது தற்போது மிக அவசியமாகின்றது. குறிப்பாக, மாவட்டத்தில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை எட்டுவதற்கு, நிலவி வரும் அரசியல் அழுத்தங்களை மாவட்டத்தின் அரசியல்-பொருளாதார நலன்களின் அடிப்படையில் ஆராய்ந்து, உரிய பரிந்துரைகளைச் செய்வது கட்டாயமானது. அந்தவகைய, இவற்றை ஆராயும் வகையில் ‘மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவணை மேய்ச்சல் தரை: நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம்’ எனும் இக் குறுநூல் வெளியாகின்றது.