BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Ezhuna | எழுநா - ECPv6.13.2.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://www.ezhunaonline.com
X-WR-CALDESC:Events for Ezhuna | எழுநா
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:Asia/Kolkata
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0530
TZOFFSETTO:+0530
TZNAME:IST
DTSTART:20250101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260704T083000
DTEND;TZID=Asia/Kolkata:20260704T103000
DTSTAMP:20260727T040109
CREATED:20260715T061150Z
LAST-MODIFIED:20260715T061150Z
UID:39230-1783153800-1783161000@www.ezhunaonline.com
SUMMARY:உத்தியாக்கள் - கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்' - நூல் அறிமுக நிகழ்வு - திருகோணமலை
DESCRIPTION:‘பழங்குடிச் சமூகங்களும்\, விளிம்புநிலை இலக்கியங்களும்’ எனும் கருப்பொருளில் இடம்பெற்ற 53ஆவது இலக்கியச் சந்திப்பில்\, எழுநா வெளியீடாகிய திரு. க. பத்திநாதன் அவர்களின் ‘உத்தியாக்கள் – கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ நூல் அறிமுக நிகழ்வு 04.07.2026 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு திருகோணமலை\, சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது. \nஇந்நிகழ்வில் நூல் அறிமுக உரையாற்றிய தமிழூராள் அனுஷ்திக்கா அவர்கள் “இலங்கையின் பழங்குடிச் சமூகமென்றால் மகியங்கணை மட்டுமே நினைவிற்கு வரும். ஆனால் அதற்கு அப்பாற்பட்டதாக கிழக்கிலங்கை தமிழ்க் கரையோர வேடர்களின் வாழ்வியலை இந்நூல் ஆவணப்படுத்துகிறது. கரையோரப் பழங்குடி மக்களின் ‘உத்தியாக்கள்’ சடங்கை மையமாகக் கொண்ட இந்நூல்\, அவர்களின் பண்பாட்டையும் வேர்களையும் தேட வேண்டிய வரலாற்றுப் பொறுப்பை நமக்கு உணர்த்துகிறது” என்று குறிப்பிட்டார். \nஇந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள்\, சமூக செயற்பாட்டாளர்கள்\, பொது மக்கள்\, மாணவர்கள்\, பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். \nபடங்கள் – இணையம்
URL:https://www.ezhunaonline.com/event/uthiyakkal-cultural-movements-of-the-coastal-veddahs-of-eastern-sri-lanka-book-launch-event-trincomalee/
LOCATION:Sarvodaya Development Education Center\, Nilaveli Road in Uppuveli\, Trincomalee\, Eastern Province\, 31010\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/07/FT-17.jpeg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260703T163000
DTEND;TZID=Asia/Kolkata:20260703T180000
DTSTAMP:20260727T040109
CREATED:20260708T044143Z
LAST-MODIFIED:20260708T044249Z
UID:39138-1783096200-1783101600@www.ezhunaonline.com
SUMMARY:'சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு'  - நூல் அறிமுக நிகழ்வு - யாழ் பத்திரிசியார் கல்லூரி
DESCRIPTION:மக்கள் கலை இலக்கியப் பேரவையின் ‘நூறு மலர்கள் மலரட்டும்’ புத்தக அரங்க விழாவில்\, எழுநாவின் வெளியீடாகிய சிரேஷ்ட ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமாகிய இரா. சடகோபன் அவர்களின் ‘சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு’ நூல் அறிமுக நிகழ்வு\, கடந்த 03.07.2026 வெள்ளிக்கிழமை\, மாலை 4.30 மணிக்கு யாழ் பத்திரிசியார் கல்லூரியில் இடம்பெற்றது. \nஇந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர் P. கோபிநாத் அவர்கள் அறிமுக உரையினை நிகழ்த்தினார். \nஅவர் உரையாற்றுகையில்\, “சிறந்த சட்டத்தரணியாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் கலைஞராகவும் விளங்கும் இரா. சடகோபன்\, 2023 இல் இருநூற்றாண்டு வரலாற்றினைக் கடந்திருக்கும் மலையக மக்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி இந்நூலில் சிறப்பாக எழுதியிருக்கின்றார். ஒவ்வொரு தலைப்பின் கீழும் பல விடயங்களை தெளிவாக விளக்கியிருக்கின்றார். ஒரு தலைப்பில் ‘கட்டிப்போட்ட கயிறுகளும் கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளும்’ என ஓர் உவமையைக் கையாண்டிருக்கின்றார். இங்கு கட்டிப்போட்ட கயிறுகளாக மலையக மக்களின் சாதி\, மதம்\, அடிமைத்தனம் போன்ற விடயங்களை எழுத்தாளர் குறிப்பிடுகின்றார். கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளாக 3 மாதக்கூலி\, 12×12 அடி லயம்\, கங்காணிமார் மற்றும் துரைமாரின் ஆதிக்கம் போன்றவற்றைக் குறிப்பிடுகின்றார். மேலும் அதிகாரப் பிரமிட்டுகளின் அடியில் நசுங்கிக்கிடந்த மக்கள் என்பதையும் விளக்கியிருக்கின்றார்.” எனக் குறிப்பிட்டிருந்தார். \nஇந்நிகழ்வில் மூத்த எழுத்தாளர்கள்\, மாணவர்கள்\, பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
URL:https://www.ezhunaonline.com/event/a-history-that-transcended-plots-and-conspiracies-book-launch-event-jaffna-st-patricks-college/
LOCATION:St. Patrick’s College\, Jaffna\, Northern\, 4000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/07/FT-8.jpeg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260701T173000
DTEND;TZID=Asia/Kolkata:20260701T183000
DTSTAMP:20260727T040109
CREATED:20260706T062111Z
LAST-MODIFIED:20260706T115615Z
UID:39110-1782927000-1782930600@www.ezhunaonline.com
SUMMARY:'யாழ்ப்பாண மருத்துவ வரலாறு' - நூல் அறிமுக நிகழ்வு - கொழும்புத் தமிழ்ச்சங்கம்
DESCRIPTION:எழுநா வெளியீடாகிய பாலசுப்பிரமணியம் துவாரகன் அவர்களின் ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ நூல் அறிமுகம் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் அறிவோர் ஒன்றுகூடலில் 01.07.2026 புதன்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றது. \nவைத்தியக் கலாநிதி சி. அனுஷ்யந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மருத்துவர் மஹிமா சுரேஸ் அவர்கள் அறிமுகவுரையை ஆற்றியிருந்தார். \nமருத்துவர் மஹிமா சுரோஷ் உரையாற்றுகையில் மன்னன் சிங்கை செகராசசேகரன் காலப்பகுதியில் சித்தமருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவம் போன்றன எவ்வாறு வியாபித்திருந்தன என்பது பற்றி குறிப்பிட்டதோடு\, நூலில் கூறப்பட்டிருந்த ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கையில் நடந்த மேலைத்தேய மருத்துவ வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை காட்சிப்படுத்தலோடு விபரித்திருந்தார். \nமேலும் நூல் பற்றிய விடயங்களை தமிழ்ச்சங்க உறுப்பினரும் ஓய்வுபெற்ற பிரதி அதிபருமாகிய திரு. த. இராஜரட்ணம் அவர்கள் வழங்கியிருந்தார். \nகொழும்பு தமிழ்ச்சங்க உறுப்பினர்கள்\, பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
URL:https://www.ezhunaonline.com/event/medical-history-of-jaffna-book-launch-event-colombo-tamil-sangam/
LOCATION:Colombo tamil sangam\, 07 57th Ln Wellawatta\, Colombo\, Western\, 00600\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/07/FTT.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260628T140000
DTEND;TZID=Asia/Kolkata:20260628T153000
DTSTAMP:20260727T040109
CREATED:20260706T041601Z
LAST-MODIFIED:20260706T041601Z
UID:39087-1782655200-1782660600@www.ezhunaonline.com
SUMMARY:'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்'  - நூல் அறிமுக நிகழ்வு - இல-10\, புதிய வீதி மட்டக்களப்பு
DESCRIPTION:எழுநா வெளியீடாகிய இளங்கோ அவர்களின் ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ நூல் அறிமுக நிகழ்வு இல 10\, புதிய வீதி\, மட்டக்களப்பில் அமைந்துள்ள கூடத்தில் 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெற்றது. \nஇந்நிகழ்வில் ஆசிரியராகிய றிஹானா நெளபர்\, ஊடகவியலாளராகிய கேஷாயினி எட்மண்ட் மற்றும் பல்கலைக்கழக மாணவராகிய பா. பிரேமிதன் ஆகியோர் நூல் பற்றி உரையாற்றியிருந்தனர். \nநிகழ்ச்சித்தொகுப்பினை கவிஞரும் பாடலாசிரியருமாகிய அக்ஸயா பாஸ்கரமூர்த்தி அவர்கள் வழங்கியிருந்தார். \nவாசகர்கள்\, எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
URL:https://www.ezhunaonline.com/event/absences-enveloping-existence-book-launch-event-no-10-new-street-batticaloa/
LOCATION:No. 10\, New Street\, Batticaloa\, Eastern Province\, 30000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/07/ft-3.jpeg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260618T140000
DTEND;TZID=Asia/Kolkata:20260618T153000
DTSTAMP:20260727T040109
CREATED:20260622T074506Z
LAST-MODIFIED:20260622T091805Z
UID:38978-1781791200-1781796600@www.ezhunaonline.com
SUMMARY:‘வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ - நூல் அறிமுக நிகழ்வு - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபம்
DESCRIPTION:திரு. அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்களின் மணி விழா மற்றும் சேவை நலன் பாராட்டு விழாவில்\, அவரது எழுநா வெளியீடாகிய ‘வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ நூலின் அறிமுக நிகழ்வு கடந்த 18.06.2026 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு\, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் திரு. இ.த. ஜெயசீலன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. \nஇந்நிகழ்வில் முன்னாள் அதிபர் திரு. இ. பெருமாள் கணேசன் அவர்கள் நூல் அறிமுக உரையை ஆற்றினார். நூல் குறித்து அவர் குறிப்பிடுகையில்\, கிளிநொச்சி மண்ணிலிருந்து வெளியாகியுள்ள சிறந்த ஆய்வு நூலாக இதனைக் கருதுவதாகத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்\, “நவீன பொருளாதாரக் கொள்கைகளை மையப்படுத்தி\, ஒவ்வொரு துறையையும் பற்றிய விரிவான புள்ளிவிவரங்களைக் கொண்டதாக வெளிவந்துள்ள இந்நூல்\, சேவைத்துறையினர்\, நிர்வாகிகள்\, தொழில் முயற்சியாளர்கள்\, செயல்திட்ட வடிவமைப்பாளர்கள் மற்றும் பொது அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புவோருக்கு சிறந்த கையேடாக அமையும்” எனக் குறிப்பிட்டார். \nநூலுக்கான ஆய்வுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைப் பேராசிரியர் சி. விஜயகுமார் அவர்கள் வழங்கினார். அவர் தனது உரையில்\, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையப்படுத்திய ஆய்வு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வெளியீடுகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். \nநூலறிமுக நிகழ்வைத் தொடர்ந்து\, திரு. அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா நடைபெற்றது. \nஇந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்\, பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். \n      
URL:https://www.ezhunaonline.com/event/resources-and-local-economic-development-of-the-north-eastern-provinces-book-launch-event-bachilaipalli-divisional-secretariat-conference-hall/
LOCATION:Divisional Secretariat Pachchilapalli\, A-9 Road\, Pallai\, Kilinochchi\, Northern\, 42550\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/06/FT-11.jpeg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260615T100000
DTEND;TZID=Asia/Kolkata:20260615T120000
DTSTAMP:20260727T040109
CREATED:20260619T041243Z
LAST-MODIFIED:20260619T084844Z
UID:38946-1781517600-1781524800@www.ezhunaonline.com
SUMMARY:'மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம்\, இன அரசியல்\, வாழ்வாதாரம்'  - நூல் அறிமுக நிகழ்வு - சித்தாண்டி\, கூடாரம்.
DESCRIPTION:மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப்போராட்டத்தின் 1000 நாள் நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட நிகழ்வின் ஒரு அங்கமாக எழுநாவின் வெளியீடாகிய திரு. வை. ஜெயமுருகனின் ‘மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம்\, இன அரசியல்\, வாழ்வாதாரம்’ நூலின் அறிமுகம் சித்தாண்டி\, கூடாரத்தில் 15.06.2026 ( திங்கட்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. \nஇந்நிகழ்வில்\, நூலிற்கான அறிமுகவுரையினை திரு. சார்ள்ஸ் அன்ரனிதாஸ் அவர்கள் வழங்கியதுடன்\, நூல் ஆய்வுரையை திரு. க. குருநாதன் அவர்கள் வழங்கியிருந்தார். \nஇந்நிகழ்வில் அருட்தந்தை லூக்\, சட்டத்தரணி ஜெயசிங்கம்\, சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ். சிவயோகநாதன்\, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி அ. அமலநாயகி\, பண்ணையாளர்கள்\, பொதுமக்கள்\, ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/mayilathamadu-madhavan-grazing-ground-of-batticaloa-district-land-identity-ethnic-politics-livelihood-book-launch-event-sidthandi-kudaraam/
LOCATION:Sithandi\, Eravur Pattu Divisional Secretariat\, Batticaloa\, Eastern Province\, 30350\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/06/EZHUNA-EVENT-FEATURE-PSD.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260613T160000
DTEND;TZID=Asia/Kolkata:20260613T170000
DTSTAMP:20260727T040109
CREATED:20260616T043144Z
LAST-MODIFIED:20260616T043746Z
UID:38893-1781366400-1781370000@www.ezhunaonline.com
SUMMARY:'உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்' -  நூல் அறிமுக நிகழ்வு - ஏழாலை மகாவித்தியாலயம்\, யாழ்ப்பாணம்.
DESCRIPTION:மக்கள் கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில்\, யாழ் ஏழாலை மகாவித்தியாலயத்தில் 13.06.2026 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற “நூறு நூல்கள் மலரட்டும்” புத்தக அரங்க விழாவில் மூன்று நூல்களின் அறிமுகம் இடம்பெற்றது. \nஅவற்றில்\, எழுநா வெளியீடான\, திரு. கமலநாதன் பத்திநாதன் அவர்களின் ‘உத்தியாக்கள்: கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ எனும் நூலும் அறிமுகப்படுத்தப்பட்டது. \nஇந்நூலுக்கான அறிமுக உரையை மூத்த எழுத்தாளர் திரு. வடகோவை வரதராஜன் அவர்கள் வழங்கியிருந்தார். \nமாணவர்கள்\, வாசகர்கள்\, பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
URL:https://www.ezhunaonline.com/event/uthiyas-cultural-movements-of-the-eastern-coastal-fishermen-book-launch-event-ezhalai-mahavidyalayam-jaffna/
LOCATION:Earlalai Maha Vidyalayam\, Alaveddy Road\, Earlalai\, Jaffna\, Northern\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/06/fttt-2.jpeg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260603T173000
DTEND;TZID=Asia/Kolkata:20260603T183000
DTSTAMP:20260727T040109
CREATED:20260608T085812Z
LAST-MODIFIED:20260608T090322Z
UID:38786-1780507800-1780511400@www.ezhunaonline.com
SUMMARY:'வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்' - நூல் அறிமுக நிகழ்வு - கொழும்புத் தமிழ்ச் சங்கம்
DESCRIPTION:எழுநாவின் வெளியீடாகிய திரு. அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்களின் ‘வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ நூலின் அறிமுக நிகழ்வு கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் அறிவோர் ஒன்றுகூடலில் 03.06.2026 அன்று இடம்பெற்றது. \nகலாநிதி எஸ். கே. பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காரைக்கவி கந்தையா பத்மானந்தன் மதிப்பீட்டுரையினை வழங்கியிருந்தார். \n  \nபடங்கள் – திரு. தம்பையா ராஜரட்னம்
URL:https://www.ezhunaonline.com/event/resources-of-the-north-eastern-provinces-and-local-economic-development-book-launch-event-colombo-tamil-sangam/
LOCATION:Colombo tamil sangam\, 07 57th Ln Wellawatta\, Colombo\, Western\, 00600\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/06/FEATURE.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260603T140000
DTEND;TZID=Asia/Kolkata:20260603T160000
DTSTAMP:20260727T040109
CREATED:20260605T042639Z
LAST-MODIFIED:20260608T085943Z
UID:38746-1780495200-1780502400@www.ezhunaonline.com
SUMMARY:'வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்' - நூல் வெளியீட்டு நிகழ்வு - கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபம்.
DESCRIPTION:கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவையின் ஆதரவுடன் எழுநா வெளியீடாகிய\, அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்களின் ‘வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ நூலின் வெளியீட்டு நிகழ்வு 03.06.2026 (புதன்கிழமை)\, பி.ப 2.00 மணிக்கு மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. \nநிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. த. குருகுலராஜா மற்றும் ஓய்வுநிலைப் பாடசாலை அதிபர் திரு. சி. பாலகிருஸ்ணன் ஆகியோரும்\, சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. ச. மோகனபவன்\, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திரு. இ. த. ஜெயசீலன் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் திரு. தி. முகுந்தன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். \nகிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்களின் தமிழ்மொழி வாழ்த்தோடு ஆரம்பமாகிய இந்நிகழ்விற்கு மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்கள் வரவேற்பு நடனத்தை வழங்கியிருந்தனர்.வரவேற்புரையினை கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட கலாசார அலுவலர் திருமதி மாலினி அவர்கள் வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து நூல் வெளியீட்டுரையினை சிரேஸ்ட விரிவுரையாளரும் முன்னாள் பொருளியற்றுறைத் தலைவருமாகிய திரு. எஸ். எஸ். உதயகுமார் வழங்க\, மதிப்பீட்டுரையினை பேராசிரியரும் முன்னாள் அரசறிவியற்றுறைத் தலைவருமாகிய பேராசிரியர் த. கணேசலிங்கம் வழங்கியிருந்தார். \nநூலின் முதன்மைப் பிரதிகளை நிகழ்வின் அனுசரணையாளர்களும் சிறப்புப் பிரதிகளை விருந்தினர்களும் பெற்றுக்கொண்டனர். \nநூலாசிரியரின் ஏற்புரையை தொடர்ந்து\, வைத்தியர் திவாரகா கேதீஸ்வரனின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. \nஇந்நிகழ்வில் மாணவர்கள்\, ஆசிரியர்கள்\, அரச உத்தியோகத்தர்கள்\, இலக்கிய செயற்பாட்டாளர்கள்\, பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
URL:https://www.ezhunaonline.com/event/resources-of-the-north-eastern-provinces-and-local-economic-development-book-launch-event-kilinochchi-district-skill-development-hall/
LOCATION:Skill Development Center\, Ariviyal Nagar\, Kilinochchi\, Northern\, 44000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/06/ft-3.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260524T140000
DTEND;TZID=Asia/Kolkata:20260524T153000
DTSTAMP:20260727T040109
CREATED:20260526T094501Z
LAST-MODIFIED:20260526T094501Z
UID:38651-1779631200-1779636600@www.ezhunaonline.com
SUMMARY:‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு 1621–1948’ - நூல் வெளியீட்டு நிகழ்வு - கனடா
DESCRIPTION:ஓராயம் அமைப்பின் ஏற்பாட்டில்\, எழுநா வெளியீடாகிய திரு. இ. மயூரநாதன் அவர்களின் ‘யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு 1621–1948’ நூலின் வெளியீட்டு நிகழ்வு கனடாவில் உள்ள ஸ்காபரோ சிவிக் சென்ரர் கவுன்சில் மண்டபத்தில் 24.05.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்றது. \nமௌன அஞ்சலியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில்\, ஓராயம் அமைப்பின் தலைவர் திரு. பிரேம் பிரேமச்சந்திரா வரவேற்புரையை வழங்கினார். நூலுக்கான விமர்சன உரைகளை திரு. வ.ந. நவரத்தினம்\, அருண்மொழிவர்மன் மற்றும் Dr. மைதிலி தயாநிதி ஆகியோர் வழங்கினர்.\nநூலின் முதற்பிரதியை யாழ் இந்துக் கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியரான திரு. மு. ஆறுமுகசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார். \nஇந்நிகழ்வில் புலம்பெயர் தமிழர்கள்\, வரலாற்று ஆய்வாளர்கள்\, பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் தமிழ் பாரம்பரிய ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/the-development-history-of-jaffna-city-1621-1948-book-launch-event-canada/
LOCATION:Scarborough Civic Centre\, 150 Borough Dr\, Scarborough\, ON M1P 4N6\, Toronto\, M1P 4N7\, Canada
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/05/FT-13.jpeg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260516T163000
DTEND;TZID=Asia/Kolkata:20260516T180000
DTSTAMP:20260727T040109
CREATED:20260520T061831Z
LAST-MODIFIED:20260520T073229Z
UID:38613-1778949000-1778954400@www.ezhunaonline.com
SUMMARY:‘வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’  - நூல் விமர்சனக் கலந்துரையாடல் - திருகோணமலை தளம் கட்டமைப்பு.
DESCRIPTION:‘தளம்’ அமைப்பின் ‘களம்’ செயற்றிட்டத்தின் ஐந்தாவது விமர்சனக் கலந்துரையாடலாக\, எழுநா வெளியீடான திரு. அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்களின் ‘வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற நூலை மையமாகக் கொண்ட விமர்சனக் கலந்துரையாடல்\, 16.05.2026 சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை\, இல. 76\, கடற்காட்சி வீதி\, திருகோணமலையில் அமைந்துள்ள ‘தளம் நோவா’ அலுவலகத்தில் நடைபெற்றது. \nஇந்நிகழ்வில்\, எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் செயலாளர் அபிநயா ரகுராம்\, இலக்கியச் செயற்பாட்டாளரும் உருகுணைப் பல்கலைக்கழக மாணவியுமான சதுர்த்திகா உதயகுமார்\, சமூக-அரசியல் செயற்பாட்டாளர் கேஷிஹன் இளமுருகநாதன் ஆகியோர் உரையாற்றினர். \nமாணவர்கள்\, சமூக நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/resources-and-local-economic-development-of-the-north-eastern-provinces-book-review-discussion-trincomalee-site-structure/
LOCATION:1st Floor\, Periyakadai UC Complex\, Dockyard Road\, Trincomalee\, Eastern Province\, 31000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/05/FTT-2.jpeg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260428T120000
DTEND;TZID=Asia/Kolkata:20260428T133000
DTSTAMP:20260727T040109
CREATED:20260504T053205Z
LAST-MODIFIED:20260504T053205Z
UID:38445-1777377600-1777383000@www.ezhunaonline.com
SUMMARY:'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' மற்றும் 'உத்தியாக்கள்' - நூல்களின் அறிமுக நிகழ்வு - பேராதனைப் பல்கலைக்கழகம்.
DESCRIPTION:எழுநாவின் வெளியீடாகிய\, இளங்கோவின் ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ மற்றும் க. பத்திநாதனின் ‘உத்தியாக்கள்’ நூல்களின் அறிமுக நிகழ்வு பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் 28.04.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று பிற்பகல் 12 மணிக்கு\, பேராசிரியர் சு. வித்தியானந்தன் அரங்கில் இடம்பெற்றது. \nபேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்\, தற்காலிக விரிவுரையாளராகிய உ. ஜீவதர்ஷன் அவர்கள் உத்தியாக்கள் நூல் பற்றிய அறிமுக உரையினையும்\, விரிவுரையாளர் ச. யாழினி அவர்கள் இருத்தலின் மீது கவியும் இன்மைகள் நூல் பற்றிய அறிமுக உரையினையும் வழங்கினர். \nஇந்நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர்கள்\, விரிவுரையாளர்கள்\, மாணவர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/poetic-inmaikal-on-existence-and-uthiyakal-book-launch-event-university-of-peradeniya/
LOCATION:University of Peradeniya\, Galaha Rd\, Peradeniya\, Kandy\, Central Province\, 20400\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/05/FT.jpeg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260422T170000
DTEND;TZID=Asia/Kolkata:20260422T180000
DTSTAMP:20260727T040109
CREATED:20260424T095608Z
LAST-MODIFIED:20260424T095650Z
UID:38409-1776877200-1776880800@www.ezhunaonline.com
SUMMARY:வடக்குப் பிராந்திய காலநிலையியல்  - நூல் அறிமுக நிகழ்வு -  கொழும்புத் தமிழ்ச்சங்கம்
DESCRIPTION:எழுநாவின் வெளியீடாகிய\, பேராசிரிய‌ர் நாகமுத்து பிரதீபராஜா அவர்களின் ‘வடக்குப் பிராந்திய காலநிலையியல்’ நூல் அறிமுக நிகழ்வு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் அறிவோர் ஒன்று கூடலில் 2026.04.22 (புதன்கிழமை) அன்று தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றது. \nசிரேஷ்ட ஊடகவியலாளர் திரு. அனந்த பாலகிட்ணர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கல்வி நிறுவகத்தின் புவியியல் பாட விரிவுரையாளராகிய திரு. க. அறிவழகன் அவர்களால் அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது. \nதிரு. அனந்த பாலகிட்ணர் தனது உரையில் இன்று காலநிலை பற்றிய விழிப்புணர்வின் அவசியம்\, யாழ் மக்களின் வாழ்வியலில் மரங்கள் பெறும் முக்கியத்துவம்\, யாழில் பழைய பூங்காவை அமைத்த கதை\, வட பிராந்தியத்தில் நிகழ்ந்து வரும் காலநிலை மாற்றங்கள் போன்ற விடயங்கள் குறித்து அறியத் தந்தார். \nதிரு. க. அறிவழகன்\, நூல் ஆசிரியரை அறிமுகம் செய்து இந்நூல் எழுதப்பட்ட நோக்கம்\, நூல் பேசும் விடயப் பரப்பு\, அதன் சிறப்புகள்\, நூல் பற்றிய தனது கருத்துகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தலுடன் கூடிய உரையாடலாக வெளிப்படுத்தினார். \nமாணவர்\, கல்வியியலாளர்\, பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/northern-regional-climatology-book-launch-event-colombo-tamil-sangam/
LOCATION:Colombo tamil sangam\, 07 57th Ln Wellawatta\, Colombo\, Western\, 00600\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/04/FT-15.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260422T140000
DTEND;TZID=Asia/Kolkata:20260422T150000
DTSTAMP:20260727T040109
CREATED:20260428T051749Z
LAST-MODIFIED:20260428T051815Z
UID:38430-1776866400-1776870000@www.ezhunaonline.com
SUMMARY:இரு நூற்றாண்டு மலையகம் - வலியும் வாழ்வும் - நூல் வெளியீட்டு நிகழ்வு - இராகலை\, சில்வர்கண்டி தமிழ் வித்தியாலயம்
DESCRIPTION:எழுநா மற்றும் விம்பம் அமைப்புகளின் தொகுப்பில் வெளியான ‘இரு நூற்றாண்டு மலையகம் – வலியும் வாழ்வும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு 22.04.2026 (புதன்கிழமை) அன்று பிற்பகல் 2.15 மணிக்கு இராகலை\, சில்வர்கண்டி தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. \nஇராகலை\, சில்வர்கண்டி தமிழ் வித்தியாலய அதிபர் திரு. ச. பன்னீர்செல்வம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியரும் பேரவை உறுப்பினருமாகிய திரு. ச. மோகன்ராஜ் நூலறிமுகத்தினை வழங்கினார். \nமேலும்\, நூலாய்வுரையினை டலோஸ் தமிழ் மகாவித்தியாலய அதிபர் கவிஞர் திரு. மை. பா அவர்களும்\, கருத்துரையினை மலையக தேசிய கலை இலக்கிய பேரவையின் தலைவரும்\, மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் ஓய்வுபெற்ற பீடாதிபதியுமாகிய திரு. சிவ. இராஜதந்திரனும் வழங்கியிருந்தனர். \nமாணவர்\, பெற்றோர்\, செயற்பாட்டாளர்\, கல்வியியலாளர்\, பொதுமக்கள்\, ஊடகவியலாளர் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். \n 
URL:https://www.ezhunaonline.com/event/two-centuries-of-highlands-pain-and-life-book-release-event-irakala-silverkandy-tamil-vidyalayam/
LOCATION:Ragalai\, Silverkandy Tamil Vidyalaya\, Ragalai\, Nuwaraeliya\, Central Province\, 22200\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/04/FEATURE.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260308T100000
DTEND;TZID=Asia/Kolkata:20260308T110000
DTSTAMP:20260727T040109
CREATED:20260313T062328Z
LAST-MODIFIED:20260313T062328Z
UID:38072-1772964000-1772967600@www.ezhunaonline.com
SUMMARY:பசுமை எனும் பேரபாயம் - நூல் அறிமுக நிகழ்வு -  இரத்தோட்டை பிரதேச சபை மண்டபம்.
DESCRIPTION:நிமிர் விடுதலை இயக்கத்தினால் ‘காணி உரிமைகளும் மலையகப் பெண்களும்’ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வில் எழுநாவின் வெளியீடாகிய\, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் ‘பசுமை எனும் பேரபாயம்’ நூல் அறிமுக நிகழ்வு இரத்தோட்டை பிரதேச சபை மண்டபத்தில் 08.03.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் R. மதுசிகா அவர்களினால் ‘பசுமை எனும் பேரபாயம்’ நூலை முன்வைத்து ‘மலையகத்தில் சூழல் கரிசனையற்ற திட்டங்கள் பற்றிய மறுவிசாரணை’ என்ற தலைப்பில் உரை இடம்பெற்றது. \nஇந்நிகழ்வில் பிரதேச மக்கள்\, சமூக ஆர்வலர்கள்\, மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். \n   \n 
URL:https://www.ezhunaonline.com/event/the-green-revolution-book-launch-event-rathottai-pradeshiya-sabha-hall/
LOCATION:Rattota Pradeshiya Sabha\, Rattota Pradeshiya Sabha\, Raththota\, Matale\, Central Province\, 21\,000
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/03/FT-12.jpeg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260307T163000
DTEND;TZID=Asia/Kolkata:20260307T184500
DTSTAMP:20260727T040109
CREATED:20260310T042405Z
LAST-MODIFIED:20260310T042405Z
UID:38036-1772901000-1772909100@www.ezhunaonline.com
SUMMARY:பசுமை எனும் பேரபாயம் - நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் - ஸாஹிறா ஆரம்பப் பாடசாலை\, புத்தளம்.
DESCRIPTION:எழுநாவின் வெளியீடாகிய\, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் ‘பசுமை எனும் பேரபாயம்’ நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்\, ‘PILLARS’ அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் வீதி\, புத்தளத்தில் அமைந்துள்ள ஸாஹிறா ஆரம்பப் பாடசாலையில்\, 07.03.2026 (சனிக்கிழமை) அன்று மாலை 4.30 மணி தொடக்கம் 6.45 மணி வரை இடம்பெற்றது. \nZ.A. ஸன்ஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் Z.A.M. ரஸ்மி\, நூலாசிரியர் அறிமுகத்தினை வழங்கியிருந்தார். நூல் விமர்சன உரைகளை கொழும்பு பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளரும்\, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான அமைச்சின் இழப்பீட்டுக்கான அலுவலக ஆணையாளருமாகிய நஸீஹா ஹிஸ்மி அவர்களும்\, புத்தளம் மாவட்டச் செயலக புள்ளிவிபரக்கிளையின் மாவட்டப் பிரதிப்பணிப்பாளரகிய S. தனபாலசிங்கம் அவர்களும் வழங்கியிருந்தனர். \nPILLARS அமைப்பின் செயலாளர் ரினாஸ் முஹம்மத் அவர்கள் நன்றியுரையினை வழங்கியிருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பினை\, இலங்கை தேசிய நீருயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நீர்வள வளர்ப்பு நிபுணர் A. அர்ஷத் அலி அவர்கள் வழங்கியிருந்தார். \nநூல் அறிமுகத்தினைத் தொடர்ந்து PILLARS அமைப்பின் இப்தார் நிகழ்வுகளும் இடம்பெற்றன. \nமதகுருமார்கள்\, சூழலியலாளர்கள்\, மாணவர்கள்\, சமூக சேவகர்கள் \, பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
URL:https://www.ezhunaonline.com/event/the-green-revolution-book-launch-event-and-discussion-zahira-primary-school-puttalam/
LOCATION:Zahira Primary Schoo\, 2RRH+9F4\, Mannar Rd\, Puttalam\, 6130\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/03/FT-8.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260228T100000
DTEND;TZID=Asia/Kolkata:20260228T110000
DTSTAMP:20260727T040109
CREATED:20260303T035329Z
LAST-MODIFIED:20260303T035329Z
UID:37955-1772272800-1772276400@www.ezhunaonline.com
SUMMARY:இருத்தலின் மீது கவியும் இன்மைகள் - நூல் வெளியீட்டு நிகழ்வு - திருமறைக்கலாமன்றம்\, யாழ்ப்பாணம்
DESCRIPTION:எழுநாவின் வெளியீடாகிய\, இளங்கோவின் ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு\, 28.02.2026 (சனிக்கிழமை) அன்று\, காலை 10.00 மணிக்கு – 238\, பிரதான வீதி\, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது மணி மண்டபம் – திருமறைக்கலாமன்றத்தில் இடம்பெற்றது. \nதிரு. இ. கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு. கி. செல்மர் எமில் வரவேற்புரை வழங்க\, திரு. டெ. க. அரவிந்தறாஜ் மற்றும் திரு. சி. ரமேஸ் ஆகியோர் மதிப்பீட்டுரைகளை வழங்கினர்.\nநிகழ்வின் தொடர்ச்சியாக\, நூலினை திரு. வடகோவை வரதராஜன் அவர்கள் வெளியிட்டு வைக்க\, திரு. சோ. பத்மநாதன் மற்றும் திரு. அ. யேசுராசா ஆகியோர் கெளரவப்பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். \nநிகழ்வினை ஒழுங்குபடுத்தியவர்களுக்கும்\, பேச்சாளர்களுக்கும்\, நூலாசிரியர் இளங்கோ சார்பில் வடகோவை வரதராஜனால் நினைவுப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. பொதுமக்கள்\, வாசகர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/poetic-pleasures-on-existence-book-launch-event-thirumaraikalamandram-jaffna/
LOCATION:Thirumarai Kalamanram\, 238 Main Street\, A9\, Jaffna\, 4000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/03/FT.jpeg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260225T174500
DTEND;TZID=Asia/Kolkata:20260225T183000
DTSTAMP:20260727T040109
CREATED:20260227T045632Z
LAST-MODIFIED:20260227T054332Z
UID:37925-1772041500-1772044200@www.ezhunaonline.com
SUMMARY:பசுமை எனும் பேரபாயம் – நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் – கொழும்புத் தமிழ்ச் சங்கம்.
DESCRIPTION:எழுநாவின் வெளியீடாகிய\, முனைவர் ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் ‘பசுமை எனும் பேரபாயம்’ நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அறிவோர் ஒன்றுகூடலில் 25.02.2026 (புதன்கிழமை) அன்று மாலை 5.45 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் இடம்பெற்றது. \nதிரு. த. இராஜரட்னம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திரு. த. ரெஷாங்கன் அறிமுக உரையினை ஆற்றியிருந்தார். வாசகர்கள் \, பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
URL:https://www.ezhunaonline.com/event/the-green-deal-book-launch-event-and-discussion-colombo-tamil-sangam/
LOCATION:Colombo tamil sangam\, 07 57th Ln Wellawatta\, Colombo\, Western\, 00600\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/02/FT-18.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260131T160000
DTEND;TZID=Asia/Kolkata:20260131T170000
DTSTAMP:20260727T040109
CREATED:20260202T091008Z
LAST-MODIFIED:20260202T091048Z
UID:37722-1769875200-1769878800@www.ezhunaonline.com
SUMMARY:பசுமை எனும் பேரபாயம் - நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் - தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி
DESCRIPTION:மக்கள் கலை இலக்கியப் பேரவையின் ‘நூறு மலர்கள் மலரட்டும்’ புத்தக அரங்க விழாவில் எழுநாவின் வெளியீடாகிய\, முனைவர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களின் பசுமை எனும் பேரபாயம் நூலின் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் ஜனவரி 31 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. கலை இலக்கியப் பேரவையின் தலைவர் த. ஸ்ரீபிரகாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு ஆசிரியர் க. தவசீலன் அவர்கள் அறிமுக உரையினை வழங்கியிருந்தார். \nவாசகர்கள்\, மாணவர்கள்\, பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
URL:https://www.ezhunaonline.com/event/the-great-risk-of-greenery-book-launch-event-and-discussion-tellippalai-mahajana-college/
LOCATION:Vallai-Tellippalai-Araly Rd\, Tellippalai\, Sri Lanka\, Vallai-Tellippalai-Araly Rd\, Tellippalai\, Northern\, 4000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/02/FEATURE.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20260103T100000
DTEND;TZID=Asia/Kolkata:20260103T110000
DTSTAMP:20260727T040109
CREATED:20260108T040915Z
LAST-MODIFIED:20260108T040915Z
UID:37546-1767434400-1767438000@www.ezhunaonline.com
SUMMARY:'உத்தியாக்கள் - கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்' – நூல் அறிமுக நிகழ்வு –  வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபம்.
DESCRIPTION:வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் எழுநாவின் வெளியீடாகிய\, திரு. க. பத்திநாதன் அவர்களின் ‘உத்தியாக்கள் – கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்’ நூலின் அறிமுக நிகழ்வு 03.01.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. \nவவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்\, ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி விஜயலட்சுமி இராஜமனோகர் அவர்கள் நூல் அறிமுகவுரையினை வழங்கியிருந்தார். \nநூலாசிரியர் திரு. க. பத்திநாதன் அவர்கள் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டதுடன்\, நிகழ்வில் சிற்றுரையும் ஆற்றியிருந்தார். \nஎழுத்தாளர்கள்\, வாசகர்கள்\, பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/uthiyas-cultural-movements-of-the-eastern-coastal-fishermen-book-launch-event-vavuniya-sudthananda-hindu-youth-association-hall/
LOCATION:வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபம்\, Vavuniya Town\, Vavuniya\, Northern\, 43000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/01/ft-6.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251228T160000
DTEND;TZID=Asia/Kolkata:20251228T170000
DTSTAMP:20260727T040109
CREATED:20260106T035139Z
LAST-MODIFIED:20260106T035139Z
UID:37497-1766937600-1766941200@www.ezhunaonline.com
SUMMARY:'இரு நூற்றாண்டு மலையகம் - வலியும் வாழ்வும்' – நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் – பொகவந்தலாவ\, க்றீன் லைன் மண்டபம்.
DESCRIPTION:எழுநா மற்றும் விம்பம் அமைப்புகளின் தொகுப்பில் வெளியான ‘இரு நூற்றாண்டு மலையகம் – வலியும் வாழ்வும்’ நூலின் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும்\, அரங்கத் தோழர்கள் பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில்\, டிசம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பொகவந்தலாவ க்றீன் லைன் மண்டபத்தில் இடம்பெற்றது. \nநூல் பற்றிய அறிமுக உரையினை ஆசிரியரும் கவிஞரும் விமர்சகருமாகிய பெ. சசிக்கலா அவர்கள் வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் அண்மையில் இலங்கையைத் தாக்கிய இயற்கை அனர்த்தத்தினால் உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அரங்கத் தோழர்கள் பண்பாட்டுக்கழகத்தின் ஆற்றுகை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
URL:https://www.ezhunaonline.com/event/two-centuries-of-the-highlands-pain-and-life-book-launch-event-and-discussion-bogawantalawa-green-line-hall/
LOCATION:Bogawantalawa\, Green line hall\, Nuwara Eliya\, central\, 20200\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2026/01/ft-2.jpeg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251123T090000
DTEND;TZID=Asia/Kolkata:20251123T103000
DTSTAMP:20260727T040109
CREATED:20251126T100823Z
LAST-MODIFIED:20251126T101139Z
UID:37102-1763888400-1763893800@www.ezhunaonline.com
SUMMARY:'சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு' - நூல் அறிமுக நிகழ்வு - நாவலப்பிட்டி\, கதிரேசன் மத்திய கல்லூரி
DESCRIPTION:எழுநாவின் வெளியீடாகிய\, சட்டத்தரணியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா. சடகோபன் அவர்களின் ‘சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு’ நூலின் அறிமுக நிகழ்வு நிகர் சமூக – கலை – இலக்கிய அரங்கின் ஏற்பாட்டில் நாவலப்பிட்டி\, கதிரேசன் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில்\, அமரர் எஸ். தர்மசீலன் அமர்வில் கடந்த 23.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. \nகதிரேசன் மத்திய கல்லூரி அதிபர் திரு. எஸ். ரகு அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை கலைக்கழக குழுவின் அங்கத்தவரும் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகமுமாகிய கவிஞர் சு. முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். வரவேற்புரையினை பஸ்பாகே கோரளை பிரதேச செயலக உத்தியோகத்தர் திரு. எஸ். சிவக்குமார் வழங்க\, நூல் அறிமுக உரையினை சென். மேரிஸ் கல்லூரி ஆசிரியர் திருமதி. ஜெ.கே. சசிகாந்தன் வழங்கியிருந்தார். ஆய்வுரையினை ஆய்வாளரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமாகிய திரு. ஏ.சி.ஆர். ஜோன் வழங்க\, ஏற்புரையினை நூலாசிரியர் இரா. சடகோபன் வழங்கியிருந்தார். நன்றியுரையினை புகைப்படக்கலைஞரும் ஊடகவியலாளருமான திரு. எஸ். ஹேமானந் வழங்கியிருந்தார். இந்நிகழ்வினை நிகர் சமூக – கலை – இலக்கிய அரங்கின் அமைப்பாளரான அருணாசலம் லெட்சுமணன் ஒருங்கமைக்க\, நிகழ்ச்சித் தொகுப்பினை ஆசிரியர் திரு. வி.எம். ரமேஸ் வழங்கியிருந்தார். \n“கால அடிப்படையில்\, தேயிலைக்காலத்தில் சட்டம்\, இனவாதம்\, தோட்ட நிர்வாகம்\, தொழிற்சங்கங்கள் போன்றவற்றின் சதிகளில் இருந்தும் சூழ்ச்சிகளில் இருந்தும் மக்கள் எவ்வாறு மீண்டெழுந்துள்ளனர் என்பது பற்றி அனைவருக்கும் புரியக்கூடிய மொழிநடையில்\, பல புதிய விடயங்களை நூலாசிரியர் எழுதியுள்ளார்” என ஆய்வுரையின் போது திரு. ஜோன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். \nஇந்நிகழ்வில் பாடசாலைச் சமூகத்தினர்\, வாசகர்கள்\, பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு நூலாசிரியரால் சிறப்புப்பிரதிகளும் வழங்கப்பட்டன.
URL:https://www.ezhunaonline.com/event/a-history-beyond-conspiracies-and-plots-book-launch-event-kathiresan-central-college-nawalapitiya/
LOCATION:Kathiresan Central College\, 114 Kothmale Rd\, Nawalapitiya\, central\, 20650\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/11/FEATURE-6.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251121T150000
DTEND;TZID=Asia/Kolkata:20251121T170000
DTSTAMP:20260727T040109
CREATED:20251125T040330Z
LAST-MODIFIED:20251125T040535Z
UID:37041-1763737200-1763744400@www.ezhunaonline.com
SUMMARY:'யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும்' - நூல் வெளியீட்டு நிகழ்வு - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
DESCRIPTION:எழுநாவின் வெளியீடாகிய\, திரு. கந்தையா சண்முகலிங்கம் அவர்களின் ‘யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும்’ என்னும் நூலின் வெளியீட்டு நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் ஏற்பாட்டில்\, நவம்பர் 21 (2025) வெள்ளிக்கிழமை அன்று\, மாலை 3 மணிக்கு கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெற்றது. \nசமூகவியல் துறைத்தலைவர் கலாநிதி ச. சிறிகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். வரவேற்புரையினை செல்வி எம்.எச்.எவ். ஹசீபா (மாணவி\, சமூகவியல் துறை) அவர்கள் வழங்க\, நூல் வெளியீட்டுரையினை இ. இராஜேஸ்கண்ணன் (சிரேஷ்ட விரிவுரையாளர்\, சமூகவியல்துறை) அவர்கள் வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது. கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் நூலை வெளியிட்டு வைக்க\, நூலின் முதற்பிரதியை மொழியியல் மற்றும் ஆங்கில மொழித் துறையின் தலைவர் கலாநிதி எம். திருவரங்கன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலுக்கான மதிப்பீட்டுரைகளை சட்டத்தரணியும் அரசியல் மற்றும் சமூக ஆய்வாளருமான திரு. சி.அ. யோதிலிங்கம் அவர்களும்\, திரு. ந. மயூரரூபன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்\, கலாசார மத்திய நிலையம்\, பருத்தித்துறை) அவர்களும் வழங்கினர். \nமதிப்பீட்டுரையின் போது “அட்டைப்படம் யாழ்ப்பாண சாதியக் கட்டமைப்பை மிகவும் தத்ரூபமாக வெளிக்காட்டியுள்ளது” எனவும்\, “சாதியம் தொடர்பான பிற்கால ஆய்வுகளை இனிவருகின்ற ஆய்வாளர்கள் நடாத்த வேண்டும்” எனவும் திரு. யோதிலிங்கம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். நூலில் உள்ள விடயப்பரப்பை ஏனையோர் வாசிக்கத் தூண்டும் வகையில் திரு. மயூரரூபன் அவர்களின் மதிப்பீட்டுரை அமைந்திருந்தது. \nஇந்நிகழ்வில் விரிவுரையாளர்கள்\, மாணவர்கள்\, பல்கலைக்கழக சமூகத்தினர்\, நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர். \nபுகைப்படங்கள் : குணபாலன் இளங்கீரன்\n             \n 
URL:https://www.ezhunaonline.com/event/caste-structure-and-social-relations-in-jaffna-book-launch-event-university-of-jaffna/
LOCATION:University of Jaffna\, Ramanathan Rd\, Jaffna\, Northern\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/11/FEATURE-4.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251109T170000
DTEND;TZID=Asia/Kolkata:20251109T180000
DTSTAMP:20260727T040109
CREATED:20251112T062159Z
LAST-MODIFIED:20251112T063036Z
UID:36978-1762707600-1762711200@www.ezhunaonline.com
SUMMARY:'காட்டிக்கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்' - நூல் அறிமுக நிகழ்வு - திருகோணமலை தளம் கட்டமைப்பு.
DESCRIPTION:எழுநாவின் வெளியீடாகிய\, ‘காட்டிக்கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற நூலின் அறிமுக நிகழ்வு தளம் கட்டமைப்பின் ஏற்பாட்டில் 09.11.2025 அன்று மாலை 5.00 மணிக்கு திருகோணமலையில் அமைந்துள்ள தளம் கட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது. \nநூல் பற்றிய விமர்சன உரையினை செல்வி.பிரத்திக்கா பத்மநாதன் மற்றும் செல்வி.அன்ரனி ஸ்டீபன் கெளசிகா ஆகியோர் வழங்கியிருந்தனர். \nநிகழ்வில்\, தளம் அமைப்பின் நலன் விரும்பிகள்\, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
URL:https://www.ezhunaonline.com/event/betrayed-sea-and-abandoned-people-book-launch-event-trincomalee-site-structure/
LOCATION:Thalam organization\, 1st Floor\, Periyakadai UC Complex\, Dockyard Road\, Trincomalee\, Eastern\, 31000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/11/FEATURE-1.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:ezhunamedia@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251101T100000
DTEND;TZID=Asia/Kolkata:20251101T133000
DTSTAMP:20260727T040109
CREATED:20251105T060023Z
LAST-MODIFIED:20251105T060023Z
UID:36877-1761991200-1762003800@www.ezhunaonline.com
SUMMARY:'யாழ்ப்பாண மருத்துவ வரலாறு ' - நூல் வெளியீட்டு நிகழ்வு - யாழ். பொது நூலகம்
DESCRIPTION:எழுநா வெளியீடாகிய\, பா. துவாரகன் அவர்களின் ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்னும் நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 01.11.2025 (சனிக்கிழமை) அன்று யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. \nமங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர்\, திருமதி எழிலினி சித்தாந்தன் அவர்களால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையினை போதனா மருத்துவமனை அபிவிருத்தி உத்தியோகத்தர்\, திரு எஸ். சுதாகரன் வழங்க\, தலைமையுரையினை யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளர் சபை உறுப்பினர்\, திரு இ. பேரின்பநாயகம் வழங்கியிருந்தார். \nநிகழ்வின் தொடர்ச்சியாக நூல் அறிமுக உரையினை மருத்துவ கலாநிதியும் யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளருமாகிய திரு த. சத்தியமூர்த்தி அவர்கள் வழங்க\, சிறப்புரையினை அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான திரு ம. நிலாந்தன் அவர்கள் வழங்கியிருந்தார். தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது. நூலை மருத்துவ கலாநிதி த. சத்தியமூர்த்தி வெளியிட்டு வைக்க\, முதற்பிரதியை இலக்கியச் சோலை இ.து. குலசிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார். சிறப்புப் பிரதிகளை ஊடகவியலாளர் த. பிரபாகரன்\, அலை ஆசிரியர் ஜேசுதாஸ்\, போதனா மருத்துவமனை கணக்காளர் காண்டீபன்\, கலைமுகம் ஆசிரியர் எமில் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். \nஅதனைத் தொடர்ந்து நூல் மதிப்பீட்டுரையினை கோப்பாய் கல்வியற்கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் (ஓய்வுநிலை) முருகேசு கெளரிகாந்தன் அவர்கள் வழங்கியிருந்தார். மதிப்பீட்டுரையினைத் தொடர்ந்து ஏற்புரையினை நூலாசிரியர் பா. துவாரகன் அவர்கள் வழங்கியிருந்தார். \nநிகழ்வில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள்\, பொதுமக்கள்\, நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/jaffna-medical-history-book-launch-event-jaffna-public-library/
LOCATION:Jaffna Public Library\, Clock Tower Road\, South\, Jaffna\, Northern\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/11/FEATURE.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251031T173000
DTEND;TZID=Asia/Kolkata:20251031T183000
DTSTAMP:20260727T040109
CREATED:20251104T035941Z
LAST-MODIFIED:20251104T040028Z
UID:36863-1761931800-1761935400@www.ezhunaonline.com
SUMMARY:‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் - ஒரு வரலாற்றுத்தேடல்’ நூல் பற்றிய கலந்துரையாடல் – ஏழாலை மேற்கு சித்திவிநாயகர் சனசமூக நிலையம்.
DESCRIPTION:எழுநாவினால் வெளியிடப்பட்ட\, நடராஜா செல்வராஜா அவர்களின் ‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் – ஒரு வரலாற்றுத் தேடல்’ என்னும் நூல் பற்றிய கலந்துரையாடல் ஏழாலை மேற்கு சித்திவிநாயகர் சனசமூக நிலையத்தில் 31.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது. \nசித்திவிநாயகர் நூல் நிலைய இயக்குனர் சபைத் தலைவர் கு.ரஜீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூல் அறிமுக உரையினை ஆசிரியர் சி.ரமேஸ் அவர்கள் வழங்கியிருந்தார். \nநிகழ்வில் சனசமூக நிலைய உறுப்பினர்கள்\, மாணவர்கள் \, பொதுமக்கள் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/discussion-on-the-book-library-heritage-of-the-jaffna-peninsula-a-historical-quest-ezhalai-west-siddhivinayagar-community-centre/
LOCATION:Ezhalai West Siddhivinayagar Community Centre\, Ariyalai\, Jaffna\, Northern\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/11/FT-2.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251029T170000
DTEND;TZID=Asia/Kolkata:20251029T180000
DTSTAMP:20260727T040109
CREATED:20251103T051809Z
LAST-MODIFIED:20251103T052619Z
UID:36844-1761757200-1761760800@www.ezhunaonline.com
SUMMARY:‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் - ஒரு வரலாற்றுத்தேடல்’ நூல் பற்றிய கலந்துரையாடல் – கொழும்புத் தமிழ்ச் சங்கம்
DESCRIPTION:எழுநாவினால் வெளியிடப்பட்ட நடராஜா செல்வராஜா அவர்களின் ‘யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் – ஒரு வரலாற்றுத்தேடல்’ என்னும் நூல் பற்றிய கலந்துரையாடல் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் (விநோதன் மண்டபம்) அறிவோர் ஒன்று கூடலில் 2025.10.29 (புதன்கிழமை) அன்று மாலை 5.00 மணிக்கு இடம்பெற்றது. \nகொழும்புத் தமிழ்ச்சங்க நூலகர் ஜெயதேவன் சித்தார்த்தினி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூல் அறிமுக உரையினை எழுத்தாளர் எஸ்.ரகுநாத் அவர்கள் வழங்கியிருந்தார். \nநிகழ்வில் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள்\, நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர். \n 
URL:https://www.ezhunaonline.com/event/discussion-on-the-book-library-heritage-of-the-jaffna-peninsula-a-historical-quest-colombo-tamil-society/
LOCATION:Colombo tamil sangam\, 07 57th Ln Wellawatta\, Colombo\, Western\, 00600\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/11/ft.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251018T103000
DTEND;TZID=Asia/Kolkata:20251018T130000
DTSTAMP:20260727T040109
CREATED:20251021T112720Z
LAST-MODIFIED:20251024T093528Z
UID:36725-1760783400-1760792400@www.ezhunaonline.com
SUMMARY:'சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு' நூல் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் - நல்லூர்\, சிவகுரு ஆதீனம்.
DESCRIPTION:எழுநாவினால் வெளியிடப்பட்ட\, சட்டத்தரணியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா. சடகோபன் அவர்கள் எழுதிய ‘சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு’ நூலின் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் நல்லூர்\, சிவகுரு ஆதீனத்தில் 18.10.2025 (சனிக்கிழமை) அன்று\, காலை 10.30 முதல் பிற்பகல் 1.00 வரை இடம்பெற்றது. \nகோபாலகிருஷ்ணன் பிரவீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு\, தவத்திரு வேலன் சுவாமிகள் அவர்கள் ஆசியுரையினை வழங்க\, நூல் அறிமுக உரையினை சு.பிரவீன் அவர்கள் வழங்கியிருந்தார். மேலும்\, ‘யாழிலிருந்து மலையகம் வரை’ என்னும் தலைப்பில் குணகீதன் மதுராங்கி அவர்கள் தனது வாசிப்பு அனுபவத்தை வழங்கியிருந்தார். நிகழ்வின் தொடர்ச்சியாக ‘தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வில் மலையக மக்கள்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர் இரா. சடகோபன் அவர்கள் சிறப்புரையாற்றியிருந்தார். \nஇந்நிகழ்வில் சிறகுகள் அமைய உறுப்பினர்கள்\, மாணவர்கள்\, பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/a-history-beyond-intrigues-and-conspiracies-book-launch-event-and-discussion-nallur-sivaguru-atheenam/
LOCATION:SIVAGURU ATHEENAM\, 692\, Point Pedro Road\, Nallur\, Jaffna\, Northern\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-21-at-16.51.16_b0e88a14.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251016T080000
DTEND;TZID=Asia/Kolkata:20251016T170000
DTSTAMP:20260727T040109
CREATED:20251016T122307Z
LAST-MODIFIED:20251016T122307Z
UID:36664-1760601600-1760634000@www.ezhunaonline.com
SUMMARY:மாறுபாடில்லா உண்டி நூல் அறிமுக நிகழ்வு - நல்லூர் சிவகுரு ஆதீனம்.
DESCRIPTION:எழுநாவினால் வெளியிடப்பட்ட சித்த மருத்துவர் தியாகராஜா சுதர்மன் அவர்களின் ‘மாறுபாடில்லா உண்டி’ எனும் நூலின் அறிமுக நிகழ்வு சிறகுகள் அமையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு 10.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது. \nவேளாண்மைச் செயற்பாட்டாளர் சிவகுமாரன் கஜந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆசியுரையினை வழங்கியிருந்தார். அறிமுகவுரையினை யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை மாணவி முத்துக்குமார் நிமியா வழங்க\, ‘ஏன் இந்தப் புத்தகத்தினை வாசிக்க வேண்டும்?’ என்ற தலைப்பில் கோபாலகிருஷ்ணன் பிரவீன்ராஜ் அவர்கள் உரையாற்றியிருந்தார். நூலாசிரியரும் சித்த மருத்துவருமாகிய தியாகராஜா சுதர்மன் அவர்களால்\, அருகிவரும் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களின் விளைவாக பெருகி வருகின்ற நோய்கள் தொடர்பில் சிறப்புரை வழங்கப்பட்டது. \nஇந்நிகழ்வில் சிறகுகள் அமைய உறுப்பினர்கள்\, மாணவர்கள்\, சித்த மருத்துவத் துறையினர்\, பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/unvarapadilla-undi-book-launch-event-nallur-sivaguru-aatheenam/
LOCATION:SIVAGURU ATHEENAM\, 692\, Point Pedro Road\, Nallur\, Jaffna\, Northern\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/10/FEATURE-2.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251014T110000
DTEND;TZID=Asia/Kolkata:20251014T120000
DTSTAMP:20260727T040109
CREATED:20251015T033823Z
LAST-MODIFIED:20251015T043107Z
UID:36625-1760439600-1760443200@www.ezhunaonline.com
SUMMARY:‘வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ நூல் அறிமுக நிகழ்வு – இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம்\, யாழ் பிராந்தியம்.
DESCRIPTION:எழுநாவினால் வெளியிடப்பட்ட கலாநிதி ஜேம்சன் அரசகேசரி அவர்களின் ‘வடக்கு – கிழக்குப் பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ என்னும் நூலின் அறிமுக நிகழ்வானது\, இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தில் (யாழ். பிராந்தியம்) 14.10.2025 அன்று\, காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது. \nநூல் பற்றிய அறிமுக உரையினை கலாநிதி ஜேம்சன் அரசகேசரி அவர்கள் வழங்கியிருந்தார். கடல் வளங்கள் தொடர்பான கற்கைநெறியினைப் பயலுகின்ற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இந்நூல் அறிமுக நிகழ்வு அமைந்திருந்தது. \nஇந்நிகழ்வில் கலந்துகொண்ட திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. யேசுதாஸ் அவர்கள் “உயர்கல்வியைத் தொடருகின்ற மாணவர்களுக்குத் தமிழ்மொழியில் உசாத்துணைக்காக இவ்வாறான ஆய்வு நூல்கள் வெளிவருவது அரிதானதொன்று\, சமூகத்திற்கு\, குறிப்பாக மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இவ் ஆய்வு நூல்களை எழுநா வெளியிடுவது பாராட்டப்பட வேண்டிய விடயம்” எனக் குறிப்பிட்டிருந்தார். \nமாணவர்கள்\, விரிவுரையாளர்கள்\, கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
URL:https://www.ezhunaonline.com/event/north-eastern-regional-development-and-biodiversity-book-launch-event-sri-lanka-ocean-university-jaffna-region/
LOCATION:Ocean University\, 2nd Cross Street\, Jaffna\, Jaffna\, Northern\, 40000\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.ezhunaonline.com/wp-content/uploads/2025/10/FEATURE-1.jpg
ORGANIZER;CN="Ezhuna":MAILTO:contact@ezhunaonline.com
END:VEVENT
END:VCALENDAR